Saturday, January 5, 2013

Home


          இன்றைய அவசர உலகத்தில் பணம் என்பது ஒரு அத்தியாவசியத் தேவை. இதை யாராலும் மறுக்க முடியாது. பணம் சம்பாதிப்பது வேண்டுமானால் வெவ்வேறு வழிகளாக இருக்கலாமே தவிர எல்லோருக்கும் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் நல்வழியில் பணம் சம்பாதிப்பது என்பது இன்றைய கால கட்டத்தில் சிரமமான ஒன்றாகவே உள்ளது. அலுவலகத்தில் வேலை பார்ப்போரும், கடின உழைப்பாளர்களும் மாதம் முழுமைக்கும் சிரத்தை எடுத்துக் கொண்டுதான் சம்பாத்தியம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருமானமும் குடும்பக் செலவுகளுக்கே போதாத நிலை உள்ளது. ஆயினும், இன்றைய நாட்களில் அறிவியல் வளர்ச்சியின் துணையால் தொலைத்தொடர்புத் துறையில் காணப்படும் வளர்ச்சி, மாற்றங்கள் நாளுக்கு நல அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நாம் அனைவரும் அல்லது நம்மில் பலரும் மொபைல் பயன்படுத்துகிறோம். மொபைல் பல பிராண்டுகள் என்றாலும் எல்லா மொபைல்களிலும் எஸ் எம் எஸ் வசதி உட்பட ஜி.பி.ஆர்.எஸ் வசதி உள்ள மொபைல்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. அதே நேரம் எஸ்.எம்.எஸ் வசதி அனைத்து மொபைல்களிலும் இருக்கின்றது. சமீப காலமாக நம் அனைவரின் மொபைல்களுக்கும் தினசரி பலவகையான எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை நமக்கு உபயோகமுள்ளவைகள் உட்பட தேவையற்றவைகளும் அடங்கும். அதே நேரம், நமக்கு வரும் எஸ்.எம்.எஸ் களால் தகவல்கள் அறிந்துகொள்ள முடியுமே தவிர நேரடியாக நமக்கு பொருளாதார அளவில் பயன் ஏதுமில்லை. அதே நேரம் நமக்கு வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் கள் நமக்கு தினசரி வருமானம் ஈட்டித் தரும் என்றால் நாம் அனைவரும் வரவேற்க தயாராவோம் அல்லவா?

இருப்பினும் அவ்வாறு வரும் எஸ்.எம்.எஸ் கள் நமக்கு அவ்வித தொல்லைகளும் தருவதாக இருக்கக்கூடாது. அப்படியாக முறையாக தேர்வு செய்யப்பட்டு நமக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் கள் வழியாக ஒரு வருவாய் வரும் எனில் ஏன் நாம் அதை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

         இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மொபைல் எஸ்.எம்.எஸ் கள் வழியாக தினசரி பெரிய பெரிய வியாபார நிறுவனங்களின் சேவை, தயாரிப்புகள் ஆகியவற்றை விளம்பரங்களாக கொண்டு சேர்க்கின்றன. இந்நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் இந்தியா முழுமைக்கும் எஸ்.எம்.எஸ்கள் வழியாக பெரும்பாலான மக்களின் கவனத்தை எட்டுகின்றன. இவ்வகை விளம்பரங்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக எஸ்.எம்.எஸ் அனுப்பும் விளம்பர நிறுவனங்கள் பெறுகின்றன. என்றாலும் இவ்வகை சேவை நிறுவனங்கள் மிக எளிதாக ஆன்லைன் வழியே உறுப்பினர்களை சேர்த்துக் கொள்கின்றனர். இருப்பினும், இந்நிறுவனங்களின் சேவை அனைத்து மக்களையும் சென்று சேர்கின்றதா என்றால் இல்லை. இணையதளங்கள் என்றால் என்ன என்று கேட்கும் மக்கள் நம்மில் இன்றும் பலருண்டு. அவர்களையும் கவரவேண்டுமே என்றால் அதிலும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

அவர்கள்: